எனது உணர்வுகளுக்கும், எனது கனவுகளுக்கும், தமிழ் வடிவம் தந்தேன். எனது உலகம் உருவானது. இங்கு நீங்களும் வாழலாம். உங்கள் நிழலும் வெண்மையாகவே இருக்கும்.
Saturday, May 29, 2010
எனது உலகம் ஆரம்பமானது..
வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம். உங்கள்முன் ஒரு புதியவன். அவனைப்பற்றி சொல்வதானால், வாழ்க்கைக்குள்ளே வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் உன்னைப்போல் ஒருவன். மேகத்திற்குள்ளே நீர்த்துளியை தேடுவதைப்போல திறமைக்கான களத்தை தேடிக்கொண்டிருப்பவன். நிச்சயம் அந்த ஆடுகளம் புகுந்து அடித்து நொறுக்குவேன். தமிழ் மீதான அதீத பற்று எனது கையில் பேனாவை கொடுத்தது. வலைப்பதிவு என்ற உலகத்தை தனக்கே தெரியாமல் எனக்கு அறிமுகம் செய்த லோசன் அண்ணாவுக்கு எனது முதலாவது பதிவில் நன்றி கூற மறக்கவில்லை. இனி
உங்கள் வாசகனாக இருந்த ஒருவன், உங்களை வாசகனாக்க புறப்படுகிறான். ஒரு புதிய பக்கத்தில், ஒரு புதிய பேனா எழுத ஆரம்பிக்கிறது. உங்கள் வாழ்த்துக்களாலும், ஆசிகளாலும் அந்த பேனாவை நிரப்புங்கள்.
எனது உணர்வுகளும், எனது கற்பனைகளும், எனது கனவுகளும், எனது சுவடுகளும் தமிழ்க்காற்றை சுவாசிக்க, எனது உலகம் மெதுவாய் சுழல ஆரம்பிக்கிறது.....
Subscribe to:
Post Comments (Atom)
வாங்க மிஸ்ரி..
ReplyDeleteகிளப்புங்கள்...
வாழ்த்துக்கள்..
ReplyDeleteவந்திட்டீங்கெல்ல இனிமேல் கலக்கல்தான்
ReplyDeleteவாழ்த்துக்கள் ....... கலக்குங்கள் .......
ReplyDeleteஉற்சாகமான வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி....... நன்றி........ நன்றி..........